Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

vinoth
வெள்ளி, 24 ஜனவரி 2025 (18:09 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு மாறாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவ பொங்கலுக்கு ரிலீஸான அனைத்துப் படங்களிலும் அதிக வசூல் செய்த படமாக மத கஜ ராஜா முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதனால் தொடர் தோல்விகளாலும் உடல்நலப் பிரச்சனைகளாலும் அவதிப்பட்டு வந்த விஷாலுக்கு உத்வேகமான ஒரு சூழல் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments