Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் சூதாட்ட விளம்பர சர்ச்சை… சரத்குமாரை ஊமைக்குத்து குத்திய விஷால்!

Advertiesment
ஆன்லைன் சூதாட்ட விளம்பர சர்ச்சை… சரத்குமாரை ஊமைக்குத்து குத்திய விஷால்!
, புதன், 14 டிசம்பர் 2022 (16:35 IST)
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் தொடர்ந்து நடித்து வருவது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் சரத்குமார். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன்  ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இதுபற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர் “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் ரம்மியை மக்கள் விளையாடுவதாக பலர் சொல்கிறார்கள். நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட மக்களிடம் கேட்டேன். ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை. பின்னர் சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சரத்குமாரின் இந்த கருத்துக்கு மறைமுகமாக கடுமையான விமர்சனம் செய்துள்ளார் விஷால். அதில் அவர் “என்னையும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை. உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் காசுதான் உதவும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் படத்துக்கு ப்ரேக் விட்ட தில் ராஜு… வாரிசுதான் காரணமா?