Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் சொன்னா என்ன வேணாலும் செய்வாங்களா? – ரம்மியால் சரத் ஆதங்கம்!

Advertiesment
நான் சொன்னா என்ன வேணாலும் செய்வாங்களா? – ரம்மியால் சரத் ஆதங்கம்!
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (12:34 IST)
பூரண மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமார் ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் சரத்குமார். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன்  ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சி சென்னையில் போராட்டம் நடத்தியது. இதில் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் ரம்மியை மக்கள் விளையாடுவதாக பலர் சொல்கிறார்கள். நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட மக்களிடம் கேட்டேன். ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை. பின்னர் சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்!