Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவான ‘என்னம்மா’ புகழ் ராமர் !

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (13:08 IST)
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் கவனம் ஈர்த்துள்ள ராமர் இப்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றி பிரபலமானவர் ராமர். இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கலாய்த்து வழங்கிய எபிசோட் மற்றும் ஆத்தாடி என்ன உடம்பீ போன்ற பாடல்களைப் பாடிய விதம் ஆகியவை இணையதளங்களில் வைரல் ஆகின.

இதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்க சில படங்களில் காமெடியனாக தோன்றினார். இதையடுத்து அவர் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாளைய இயக்குனரில் கலந்துகொண்ட மணிராம் என்பவர் இந்தப் படத்தை இயக்க, சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தில் ராமருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments