ஃபேஸ்புக்கில் பல நண்பர்களுடன் முகமுகமாக உரையாட உலகளாவிய ஒரு வலைதளமாக இருக்கிறது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் வந்து நம் புகைப்படங்களை அப்போடு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்திட ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அடுத்து வந்த ஃபேஸ் ஆப்பில் நம் இளமை முகம், முதிய முகத்தைக் கொண்டு மக்கள் தங்கள் ஸ்டேட்டஸில் அதிர வைத்தனர்.
இப்போது ஃபேஸ் ஆப்பை விட அதிரடியாக ஜாவோ (#ZAO )ஆப் சீனாவில் பிரபலமாகிவருகிறது. இதில் நமது புகைப்படத்தை முதலில் பதிவேற்ற வேண்டும் ,அதன்பின் ஒரு திரைபடத்தில் நமக்குப் பிடித்த கதாப்பாத்திரத்தை அதில் தெரிவு செய்து பதிவிட்டால், ஆப்பில் அந்த கதாப்பாத்திரம் ஏற்றுக்கொண்டதெனில் அடுத்த 8 நொடிகளில் படத்தில் கோடி பெற்று சம்பாதித்து உலகப் புகழ் பெற்ற நடிகரின் முகத்திற்கு பதிலாக நமது முகம் இந்த ஜாவோ ஆப்பில் தெரியும்.
தற்போதுவரை பலமில்லியம் மக்கள் இந்த ஆப்பை பார்த்துள்ளனர். டுவிட்டர் மற்றும் சமூக வளைதளங்களில் வைரலாகிவருகிறது.