Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 69 படத்தின் பூஜை & முதல் நாள் ஷூட்டிங் எப்போது?

தளபதி 69 படத்தின் பூஜை & முதல் நாள் ஷூட்டிங் எப்போது?
, புதன், 2 அக்டோபர் 2024 (11:13 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. படம் 450 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் ஒரு போஸ்டரோடு வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் பூஜை அக்டோபர் 3 ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும், முதல் நாள் ஷூட்டிங் அதற்கடுத்த நாள் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு செட்டில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளசுகளை கவர்ந்த கோல்டன் ஸ்பேரோ பாடல்… யுடியூபில் படைத்த சாதனை!