Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் சாருக்கு நடந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… லப்பர் பந்து இயக்குனர் உருக்கம்!

Advertiesment
விஜயகாந்த் சாருக்கு நடந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… லப்பர் பந்து இயக்குனர் உருக்கம்!

vinoth

, புதன், 2 அக்டோபர் 2024 (10:46 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. படத்தில் நடிகர் தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராகக் காட்டப்பட்டார். அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது அவருக்கு விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாடல்’ ஓடவிடப்படும். அதே போல அவரின் வீட்டு சுவரில் விஜயகாந்த் ஓவியமும் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் தமிழரசன், “மறைந்த விஜயகாந்த் சாருக்கு கடந்த சில ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் எனன் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை என் படத்தில் கொண்டாடவேண்டும் என நினைத்தேன். நம் படம் பண்ணினால் அதில் விஜயகாந்த் சார் இருக்கவேண்டும். பொட்டு வச்ச பாடல் இருக்கவேண்டும் என நினைத்தேன். அதை வைத்து சமூகவலைதளங்களில் ஒரு வாரமாவது ட்ரண்ட் ஆக்கவேண்டும் என நினைத்தேன். ரசிகர்கள் கொண்டாடவேண்டும் என்பதற்காகவே அந்தக் காட்சிகளை நான் வைத்தேன். ஏனென்றால் நான் விஜயகாந்த் சாரின் ரசிகன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த் உடல்நிலையை லதாவிடம் விசாரித்த பிரதமர் மோடி.. அண்ணாமலை தகவல்..!