Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவுண்டு கட்டி ரெடியாகும் விஜய் சேதுபதி.... "துக்ளக் தர்பார்" லேட்டஸ்ட் அப்டேட்!

Advertiesment
ரவுண்டு கட்டி ரெடியாகும் விஜய் சேதுபதி....
, வெள்ளி, 22 மே 2020 (13:38 IST)
ஒ மை கடவுளே படத்தை தொடர்ந்து மாஸ்டர்,  லாபம், க.பெ. ரணசிங்கம், கடைசி விவசாயி , காத்துவாக்குல ரெண்டு காதல் என அடுக்கடுக்கான பல படங்ளை கைவசம் வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து வெளியாகவிருந்த இந்த படங்கள் அத்தனையும் கொரோனா லாக்டவுனில் மாட்டிக்கொண்டது. படத்தின் படப்பிடிப்புகளும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸில் இருந்து தளர்வு ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் படத்தின் வேலைகளை திரைத்துறையினர் துவங்கியுள்ளனர். அந்தவகையில் தற்போது விஜய் சேதுபதியின்  "துக்ளக் தர்பார்" படத்தின் புதிய அப்டேட்டை  7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, "இப்படத்தின் 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், மீதம் 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு  உள்ளதாக தெரிவித்துள்ளனர்." அறிமுக இயக்குனர் தில்லி பிரசாத் இயக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹெய்தாரி ஹீரோயினாக நடிக்க 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாக்டவுனில் அம்மாவானார் மைனா நந்தினி - குவியும் வாழ்த்துக்கள்!