லாக்டவுனில் அம்மாவானார் மைனா நந்தினி - குவியும் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 22 மே 2020 (13:16 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொணடர். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினி தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த மகிழ்ச்சியாக செய்தியை கேட்டு அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "காத்துவாக்குல ரெண்டு காதல்" ஸ்வாரஸ்யமான ஷூட்டிங் அப்டேட் இதோ!