நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கவுள்ள நிலையில் அந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இப்போது ராஜு முருகன் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ராஜு முருகன் விரும்பி அவரிடம் கதையை சொல்லியுள்ளார்.
விஜய் சேதுபதிக்கு கதை பிடித்துவிட்டாலும், அவரால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளைக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளாராம். இப்போதே அவர் நடிக்கும் 10 க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.