இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை இப்போது இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் தயாரிக்கிறார். இந்நிலையில் கைதி படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இது சம்மந்தமாக அவ்வப்போது தயாரிப்பாளரும் அப்டேட் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை இப்போது தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ரஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளார். ஏற்கனவே ஜப்பானில் கைதி திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.