Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

96 இவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கல - விஜய் சேதுபதி!

96 இவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கல - விஜய் சேதுபதி!
, செவ்வாய், 7 ஜூலை 2020 (15:10 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்தது படத்திற்கு மேலும் புகழை சேர்த்து.

இந்த படம் பலரது மனதில் ஆழமாக பதிந்ததுடன் பாடல்களும் வெறித்தனமான ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி - திரிஷா பெஸ்ட் ஜோடியாக ரசிகர்களை கவர்ந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி 96 படத்தின் அனுபவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.

96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவே இல்லை. 96 ராம் போல தான் என்னுடைய கேரக்டரும் நான் co-education பள்ளியில் படித்தாலும், பெண்களிடம் அதிகம் பேசியதில்லை. பல நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள், நீ எங்களை தவிர வேறு யாருடனும் பேசுவதில்லை, நீ எப்படி சினிமாவில் நடிப்பாய்?' என்று கூட கேட்டார்கள்". 96 ஏவரேஜாக போகும் என நினைத்தேன். ஆனால்,  எதிர்பார்த்தை விட பெரிய ஹிட் அடித்தது என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் மட்டுமில்லை ட்ரெஷனல் உடையிலும் கலக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்