Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
வியாழன், 16 மே 2024 (19:15 IST)
திரை உலகில் அறிமுகமான ஒரு சில ஆண்டுகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 படங்களை முடித்து விட்ட நிலையில் அவரது 51வது படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 51 வது படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்தது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது 51 வது படத்தையும் இயக்கி முடித்து விட்டார் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் தனது 51-வது பட டைட்டில் நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே கசிந்து விட்டதாகவும் ’சத்தியமா பொய்’ என்ற டைட்டில் தான் நாளை வெளியாக இருப்பதாகவும் இணையத்தில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். இந்த டைட்டில் உண்மையா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments