Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு.. நாயகி இவரா?

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில்  அறிவிப்பு.. நாயகி இவரா?

Mahendran

, திங்கள், 6 மே 2024 (11:16 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகிய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த படத்திற்கு  ’பைசன் காளமாடன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் இது குறித்த போஸ்டில் இயக்குனர் மாரி செல்வராஜ் ’கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்… என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.
 
இந்த படத்தை பா ரஞ்சித் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகிய இரண்டு நாயகிகள் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் லால், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இரண்டு வருடங்களுக்கு பின்  துருவ் விக்ரம் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் பட ஷூட்டிங்கில் இளமையான தோற்றத்தில் கமல் & சிம்பு… வைரலாகும் போட்டோ!