Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சாக்லேட் பாயாக மாதவன்… கங்கனாவோடு இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

மீண்டும் சாக்லேட் பாயாக மாதவன்… கங்கனாவோடு இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்!

vinoth

, செவ்வாய், 14 மே 2024 (14:53 IST)
தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் மாதவன். அடுத்தடுத்து அவர் நடித்த லேசா லேசா, மின்னலே மற்றும் ரன் ஆகிய திரைப்படங்கள் அவரை சாக்லேட் ஹீரோவாக்கியது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தன் மார்க்கெட்டை இழக்க, அதன் பின்னர் இறுதிச் சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுத்தார்

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் கங்கனாவோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் கங்கனா தேர்தலில் போட்டியிடுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு இதுவும் ஒரு காதல் கதை என வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் பழைய மாதவன் ஸ்டைலிலான ரொமாண்டிக் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாள சினிமாவில் இயக்குனராக கால்பதிக்கும் கௌதம் மேனன்… ஹீரோ இவர்தான்!