விஜய்சேதுபதியுடன் பைக்கில் புகழ்: வைரல் புகைப்படங்கள்!
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கொக்கு வித் கோமாளி புகழ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இவரின் படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் வரும் கேரக்டர் என்பதால் சம்பளமும் அதிகமாக கொடுக்கப்பட்டதாகவும் தெரிந்தது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. விஜய் சேதுபதி பைக் ஓட்ட அவர் பின்னால் புகழ் உட்கார்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து ரசித்து வருகின்றனர்