Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மாநகரம்’ இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக்!

’மாநகரம்’ இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக்!
, திங்கள், 22 மார்ச் 2021 (12:41 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே 
 
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி கேரக்டரின் லுக் சமீபத்தில் வெளியாகி உள்ளது. ஸ்டைலிஷாக இருக்கும் இந்த லுக்கை பார்த்து அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்கள் 
 
தமிழில் முனீஸ்காந்த் கேரக்டருக்கும் இந்த கேரக்டருக்கு மிகுந்த வித்தியாசம் இருப்பது போன்று இந்த ஸ்டில்லை பார்த்ததில் இருந்தே தெரிகிறது. எனவே படம் முழுவதும் விஜய் சேதுபதி இதே ஸ்டைலில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ‘மும்பைகார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொக்கையா இருந்தாலும் தயாரிப்பாளரைக் காப்பற்றிய நெஞ்சம் மறப்பதில்லை!