எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

Siva
வியாழன், 17 ஜூலை 2025 (18:09 IST)
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப் படம் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, சரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
 
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்தப் படம், கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு, சண்டை, விவாகரத்து உள்ளிட்டவற்றை மிகவும் சுவாரசியமாக பேசி உள்ளது என்பது கிட்டத்தட்ட மூன்று நிமிட ட்ரெய்லர் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
 
 "உன்னை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வதை பார்த்து, நீ உன் அப்பா அம்மாவையே திட்டுவாய்" என்று ஆரம்ப காட்சிகளில் விஜய் சேதுபதி கூறும் நிலையில், அதற்கு அடுத்த காட்சிகளிலேயே பஞ்சாயத்து முன் "எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்டுருங்க" என்று நித்யா மேனன் கூறுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 
மொத்தத்தில், வழக்கம்போல் இந்த படத்தையும் ஒரு குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக பாண்டிராஜ் உருவாக்கி இருக்கிறார் என்பதை ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments