Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ‘’வாத்தி கம்மிங்'' பாடல் சாதனை... அனிருத் உருக்கம் !

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (17:38 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படத்தின் வெற்றி மற்றும் வசூல் சாதனை மீண்டும் திரையரங்கம் மக்களை செல்ல வைப்பதாக இருந்தது. அதேபோல் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில், இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இந்தியில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.

 
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா வாண்டன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டில் IMDB-ன் இந்தியாவில் மிகப் பிரபலமான படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சுமார் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மாஸ்டர் பட இசையமைப்பாளர் அனிருத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி என்ற பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் , நடன அமைப்பாளர் தினேஷ் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 47 வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்து விஜய்யின் coomondp ஐ  சமூக வலைதளத்தைத் தெறிக்க விட்டு வருகின்றனர். இன்று விஜய்யி பல வண்ண common dp கள் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?

ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

2024 ஆம் ஆண்டில் தனக்குப் பிடித்த படமாக இந்திய படத்தைத் தேர்வு செய்த ஒபாமா!

அடுத்த கட்டுரையில்
Show comments