Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்டர் படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்… படக்குழு எடுத்த முடிவு!

பார்டர் படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்… படக்குழு எடுத்த முடிவு!
, வெள்ளி, 18 ஜூன் 2021 (13:20 IST)
அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கி ரிலீஸூக்கு தயாராக உள்ள திரைப்படம் பார்டர்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பொது முடக்கம் முடிந்ததும் இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோன இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது திரையரங்குகள் திறக்க இன்னும் நாள் ஆகும் என்பதால் ஓடிடி ரிலீஸ் என படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் இப்போது ஜுலை இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் படத்தை திரையரங்கிலேயே ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேச்சுவார்த்தை சுமூகம்… ஷங்கருக்கு 4 கோடி கொடுக்கும் வடிவேலு!