இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.
 
									
										
			        							
								
																	இக்கூட்டத்தில், சமூக ஊடகங்களில் அரசியல் சமூக தலைவர்கள், திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் பற்றி கருத்துக் கூறும்பபோது, பதிவிடும்போது, நாகரிகத்துடன் மற்றும் ஆதாரத்துடன் பதிவிட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியிருந்தார்.
 
									
											
									
			        							
								
																	இதையடுத்து, தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,  சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தகவல்தொழில்நுட்ப அணி செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்யும் நற்பணிகள், நலத்திட்ட உதவிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய அதிகாரப்பூர்வமான முகநூல், டிவிட்டர் (X), இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்கள் வழங்கப்பட்டது. ஏற்கனவே அனைத்து மாவட்டத்திற்கும் தொழில்நுட்ப அணிக்கான அடையாள அட்டை வழங்கியதை தொடர்ந்து இன்று தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப அணிக்கான நிர்வாகிகளின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
 
									
			                     
							
							
			        							
								
																	கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.