Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்- புஸ்ஸி ஆனந்த்

vijay
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:25 IST)
சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில்  கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் சொல்லிற்கிணங்க, முதன் முறையாக சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
webdunia

இதனையடுத்து நேற்று சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,  சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  தளபதி விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில், கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய #கேரளா நிர்வாகிகளுக்கு #கேடயம்  வழங்கப்பட்டது.!

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.!’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மளிகை கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை...