Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும் – தமிழ்ப்படம் சிவா ஸ்டைலில் விஜய்க்கு போஸ்டர்!

Advertiesment
தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும் – தமிழ்ப்படம் சிவா ஸ்டைலில் விஜய்க்கு போஸ்டர்!
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (16:15 IST)
விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

நடிகர் விஜய்யை தமிழகத்தைக் காப்பாற்ற அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் வித்தியாசமான முறையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாக்களைக் கலாய்த்து வந்த தமிழ்ப்படத்தில் கதாநாயகன் சிவாவை அமெரிக்காவைக் காப்பாற்ற உங்களால்தான் முடியும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் சொல்வது போல ஒரு காட்சி வரும். அதை நினைவுப்படுத்தும் விதமாக மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் இப்போது ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.

சமீபத்திய ரெய்டுகளால் விஜய்யின் அரசியல் பற்றிய பேச்சுகள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளன.  இதையடுத்து  மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் ஒட்டிய போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் விஜய் அருகே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ என்க் கூறுவது போல் அச்சடிக்கப்ப்ட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஆலோசனைப் பெற்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன் பை ஒன்... அப்டேட்டை அள்ளி வீசிய சூரரை போற்று டீம் - நடுவானில் முதல் சிங்கிள்..!