விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

vinoth
புதன், 13 ஆகஸ்ட் 2025 (08:07 IST)
அருவி படத்தின் இமாலய வெற்றி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.  அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படம் அதிகளவில் பிரச்சார தன்மை கொண்டதாகவும் உள்ளீடற்ற ஆன்மீக வாழ்வியல் கதையாக இருந்ததாலும் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டது.

இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் ஒரு தேக்க நிலை உருவானது. இந்நிலையில் இப்போது அவர் எந்த விளம்பரங்களும் இல்லாமல் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து அவரே தயாரித்தும் உள்ளார். இந்த படம் ஒரு ஹெய்ஸ்ட் பின்னணியில் நடக்கும் படம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரியளவில் கவனம் ஈர்த்தது. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு வாரங்கள் தள்ளிவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். செப்டம்பர் 5 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் ரிலீஸாவதால் இந்த தள்ளிவைப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments