அஜித் படத்தில் ஒப்பந்தம் ஆன விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து ப்ரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னும் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின்தான் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் மிஷ்கின் சமீபகாலமாக மாவீரன், லியோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.