Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?... வெளியான தகவல்!

vinoth
சனி, 16 நவம்பர் 2024 (09:29 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் 26 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக நாளை படத்தில் இடம்பெற்றுள்ள ‘தினம் தினம்’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை இளையராஜாவே எழுதி இசையமைத்து பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments