Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா ரிலீஸில் ஏற்பட்ட கடைசி நேர சிக்கல்… 35 கோடி ரூபாய் கொடுத்தாரா சூர்யா?

vinoth
சனி, 16 நவம்பர் 2024 (09:24 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா முதல் காட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாள் வசூலே 58 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முந்தைய பைனான்சியரிடம் வாங்கிய மிகப்பெரிய தொகை கடனாக வந்து நிற்க, அதைக் கொடுத்தால் ரிலீஸாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வேறு வழியில்லாமல் சூர்யா சுமார் 35 கோடி ரூபாய்க்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பட ரிலீஸுக்கு உதவி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி வெற்றியால் அஜித்தை சூழும் தயாரிப்பாளர்கள்!

நடிகர் ஸ்ரீக்கு என்ன தான் நடக்குது? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை..!

அன்பறிவ் சகோதரர்களோடு கமல்ஹாசன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

மணி ஹெய்ஸ்ட் பாணியில் தமிழில் ஒரு படம்… கேங்கர்ஸ் பற்றி சுந்தர் சி அப்டேட்!

மீண்டும் தொடங்கும் இந்தியன் 3 பட வேலைகள்.. லண்டனுக்கு சென்ற ஹார்ட் டிஸ்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments