கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (11:41 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது திடீரென்று சமூகவலைதளங்களில் வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாகவும், வெற்றிமாறன் அடுத்து உடனடியாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மை என்னவென்று தெரியவில்லை, 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments