Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

vinoth

, புதன், 3 ஜூலை 2024 (07:39 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லோலோ VFX என்ற நிறுவனத்தில் தற்போது பணிகள் நடந்து வரும் நிலையில் அதை மேற்பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு சென்றுள்ளார். அங்கிருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!