வங்கி கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையாவிற்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிரபல தொழில் அதிபரும் கிங் பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக்காமல் 2016ம் ஆண்டு அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். அவர் மீதான மோசடி வழக்கு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் விஜய் மல்லையா மீது நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.