Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

கருடன் ஓடிடி ரிலீஸ் எப்போ? எந்த ஓடியியில்?... வெளியான தகவல்!

Advertiesment
சூரி

vinoth

, செவ்வாய், 2 ஜூலை 2024 (12:12 IST)
விடுதலை படத்துக்குப் பிறகு சூரி ஹீரோவாக நடித்த கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  

இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அமேசான் ப்ரைம் வீடியோவிலும், இந்தியாவுக்கு வெளியே டெண்ட் கொட்டா என்ற ஓடிடியிலும் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல யுடியூபரை மணக்கிறாரா நடிகை சுனைனா?