Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு திரைப்படத்துக்கு வந்த புது சிக்கல்… கடைசி நேரத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா?

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (15:34 IST)
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும், அடுத்து ஐதராபாத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த வாரிசு படப்பிடிப்புக்கு சென்ற செய்தியாளர்கள் அனுமதி இன்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஊழியர்கள் செய்தியாளர், மற்றும் கேமராமேனைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது விலங்குகள் நலவாரியம், இது சம்மந்தமான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், தயாரிப்பாளர்கள் சார்பாக சட்டமீறல் நடந்ததா என விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் படத்தின் நாயகன் விஜய்க்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments