வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தை அவரே சொந்தமாக ஏரியா வாரியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.