Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து புது அவதாரம் எடுத்த வரலட்சுமி!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:53 IST)
நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகையாகி விட்டார். இவர் நடித்துள்ள மாரி-2 கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. வெல்வெட் நகரம், கன்னி ராசி, அம்மாயி, நீயா 2 ஆகிய படங்கள் தற்போது வருவின் கைவசம் உள்ளது. 


 
அதோடு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'உன்னை அறிந்தால்' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது புதிதாக வெப் சீரியலுக்கும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். ரசிகர்களை இணையம் ஆக்கிரமித்திருக்கும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், வெப் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். பாலிவுட் நடிகர்களைப் போல, கோலிவுட் நடிகர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாபி சிம்ஹா, காயத்ரி, பார்வதி நாயர் ஆகியோரைத் தொடர்ந்து வரலட்சுமியும் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். 
 
'ஜீ-5' வெப் தளத்துக்காக தயாரிக்கப்படும் இந்த சீரியலை புஷ்பா இக்னாடிஸ் என்பவர் இயக்குகிறார். வருவுடன் இணைந்து நடிகர் கிருஷ்ணாவும் இதில் நடிக்கிறார். இந்தத் தகவலை வரலட்சுமியே அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தெலுங்கிலும் இந்த சீரியல் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments