Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"ஆயிரம் வனிதா ஒரு நீலாம்பரிக்கு சமம்" மகள யாருகிட்ட..? வனிதாவிடம் எகிறிய ரம்யா கிருஷ்ணன் - வீடியோ!

Advertiesment
, வியாழன், 15 ஜூலை 2021 (18:12 IST)
சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார்.
 
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்த வனிதா ரம்யா கிருஷ்ணன் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.  
 
இந்நிலையில் அதன் ப்ரோமோ வீடியோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் தன்னுடைய காளி performanceக்கு கமெண்ட்ஸ் சொன்ன ரம்யா கிருஷ்ணனை பார்த்து வனிதா “போட்டியாளர்களை கம்பேர் பண்ண வேண்டாம்” என கூற உடனே கோபப்பட்டு கொதித்தெழுந்த ரம்யா கிருஷ்ணன், " கம்பேர் பண்ண வேண்டாம் என்று யாராவது எப்படி சொல்ல முடியும்?.. என்ன இது?” என்று அதட்டி கேட்கிறார். 
 
பின்னர் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயிரம் வனிதா ஒரு நீலாம்பரிக்கு சமம் மகள யாருகிட்ட சூப்பர் ஸ்டாருக்கே பயத்தை காட்டிய பெண்மணி  ரம்யா கிருஷ்ணன் எங்க வந்து யாராண்ட...? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லொகேஷனை மாற்றிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!