Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
Vaishnavi

Siva

, புதன், 26 மார்ச் 2025 (18:39 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" சீரியலின் நாயகனாக நடிக்கும் வெற்றி வசந்தின் மனைவி வைஷ்ணவி, ஒரு சீரியல் நடிகை என்பதும், தற்போது ‘பொன்னி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பணியாற்றி வருகிறார் என்பதும் அறிந்ததே.
 
இந்நிலையில், வைஷ்ணவி தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட விபத்தால், தனது காலில்  தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும், எலும்பு மோசமாக அடிபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, "வாக்கிங் ஸ்டிக்" உதவியுடன் நடந்து கொண்டிருக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ள அவர், "திரைத்துறையில் இடம் பிடிக்கவும், அதில் நிலைத்து நிற்கவும், ஒவ்வொரு நாளும் நான் கடுமையாக பாடுபடுகிறேன். ஒவ்வொரு கதாபாத்திரமும், ஒவ்வொரு முயற்சியும், வெற்றியும், தோல்வியும் கொண்ட ஒரு பயணம். திரையில் ஒரு கணம் ஒளிரும் பின்னணியில், ஏராளமான உழைப்பும், அர்ப்பணிப்பும், பல தியாகங்களும் இருக்கின்றன.
 
என் விடாமுயற்சி, மன உறுதி, மற்றும் தீவிரமான ஆர்வம் எல்லாவற்றையும் தாண்டி முன்னேற வைக்கும். ஒவ்வொரு ஃப்ரேமுக்காகவும் போராடி, தடைகளை முறியடித்து பயணத்தை தொடர்கிறேன்."
 
என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!