Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் காஃபி கொடுத்தார், பாதிக்குமேல் என்னால் பருகமுடியவில்லை: வைரமுத்து

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (11:21 IST)
மகா கவிதை என்ற நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்நூல் வைரமுத்துவின் 39வது நூல் ஆகும். இதற்கான அழைப்பிதழை வைரமுத்து கமல்ஹாசனிடம் நேரில் கொடுத்தபோது  நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து கவிதை வடிவில் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
 
மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி 
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்
 
எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன
 
கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்
இடறி நின்றது உரையாடல்
 
குடிதண்ணீர்
எண்ணெய் ஆவதும்
எண்ணெய்
தண்ணீரின் ஆடையாவதும்
 
காலங்காலமாய்க் 
கழுவப்படாத
கண்ணீர்ப் பிசுக்கில்
எண்ணெய்ப் பிசுக்கும்
ஏறி நிற்பதும்
 
மீனென்ற 
வேட்டைப் பொருளும்
கொக்கென்ற 
வேட்டையாடு பொருளும்
சேர்ந்து செத்து மிதப்பதும்
 
நதி இறங்க 
வழியில்லாத கடலில்
எண்ணெய் இறங்குவதும்
 
உழைக்கும் மக்கள்
பிழைக்க வழியின்றிப்
பெருந்துயர் கொள்வதும் 
 
எத்துணை கொடுமையென்று
சோகம் பகிர்ந்தோம்
 
‘இதற்கு யார் பொறுப்பு’
என்றார் கமல்
 
‘லாபம் ஈட்டும்
நிறுவனம்’ என்றேன்
 
காஃபி கொடுத்தார்
பாதிக்குமேல் என்னால் 
பருகமுடியவில்லை
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments