பிரபல குணச்சித்திர நடிகை மாயா கிருஷ்ணன். தனுஷுடன் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் கவனம் பெற்றது. இதையடுத்து இப்போது பிக்பாஸ் இல்லத்துக்கு சென்றுள்ள அவர் அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அவரைக் கண்டிப்பதில்லை என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கமல்ஹாசனும் மாயா கிருஷ்ணனும் உறவினர்கள் என்றும், அதனால்தான் கமல் அவரை ஒழுங்காகக் கண்டிப்பதில்லை என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த குற்றச்சாட்டை சினிமா மூத்த பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் மறுத்துள்ளார்.
அவர் “கமலும் மாயாவும் உறவினர்கள் இல்லை. அப்படியே உறவினர்களாக இருந்தாலும் கமல் அப்படி பாரபட்சம் பார்க்கக் கூடிய ஆள் இல்லை. கமல்ஹாசனின் குணம் பற்றி எனக்கு தெரியும்” எனக் கூறியிள்ளார்.