Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்மாண்ட மேடையில் "வானம் கொட்டட்டும்" ஆடியோ லான்ஞ் - எகுறும் எஸ்பெக்டேஷன்ஸ்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:31 IST)
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் "வானம் கொட்டட்டும்" படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான்,  பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
மணிரத்னம்  மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தது. வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் மூலம் மீண்டும் தங்கை கதாபாத்திம் ஏற்று  நடித்துள்ளார்.
 
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தில் ஈஸி கம் ஈஸி கோ, கண்ணு தூங்கு என இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை சார் முத்து வெங்கட சுப்பா ராவ் ஹாலில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதே மேடையில் படத்தின் ட்ரைலரையும் ரிலீஸ் செய்ய படகுழு திட்டமிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments