Publish Date: Wed, 13 Nov 2019 (12:34 IST)
Updated Date: Wed, 13 Nov 2019 (12:40 IST)
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளிவந்துள்ளது. வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடிப்பது போன்று இப்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது.
'வானம் கொட்டட்டும்' என்ற இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. எனவே படத்தின் சிங்கிள் டிராக், இரண்டாவது பாடல் மற்றும் பாடல் வெளியீட்டு விழா என அடுத்தது கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.