Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி…பிரபல நடிகர் வேதனை

Advertiesment
extort money
, வியாழன், 4 மார்ச் 2021 (23:33 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விமல். இவர் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்தித்தார். அவரது மனைவி வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், தன்னிடம் ரூ.50 லட்சம் பணம் பறித்ததாக தயாரிப்பாளர் திருநாவுக்கரசு கொடுத்த புகார் குறித்து ந நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் தயாரிப்பாளர் திருநாவுக்கரசிடம் ரூ.50 லட்சம் வாங்கியதாக வெளியான தகவல்களால் அதிர்சி அடைந்தேன். இது மன வேதனை ஏற்படுத்தியுள்ளது.

என் வளர்ச்சியைப் பிடிக்காமல் இதைச் சிலர் செய்கிறார்கள். நான் இதற்கு முன் திருநாவுக்கரசை பார்த்ததே இல்லை. இதுகுறித்து நான் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பின்னணிப் பாடகி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்...ரசிகர்கள் வாழ்த்து