Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுடியூபர்கள் பிழைப்பைப் பார்த்தால் நம்ம சோலியை முடிச்சுடுவாங்க… FDFS விமர்சனம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கருத்து!

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (14:41 IST)
தமிழ் சினிமாவில் தற்போது முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் என சொல்லப்படும் பொதுமக்களின் கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகின்றன. அவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன. சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவான ‘கங்குவா’ திரைப்படம்  கடந்தவாரம் ரிலீஸான போது அதைக் காலி பண்ணியதில் இந்த விமர்சனங்கள் முக்கியப் பங்காற்றின.

இது சம்மந்தமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் “தியேட்டர்களுக்கு யுடியூப் ரிவ்யூவர்களை நாமே அனுமதிப்பது நமது தொழிலை நாமே கெடுத்துக் கொள்வது போலதான். அவர்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு எந்த படத்தின் விமர்சனங்களும் வரக்கூடாது” என சட்டம் கொண்டு வாருங்கள் என பேசினார். அதையடுத்து நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் யுடியூப் சேனல்களை திரையரங்குகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

ஆனால் இது யுடியூப் சேனல்களின் பிழைப்பைக் கெடுப்பது போல உள்ளதாக கருத்துகளும் எழுந்தன். இதற்குப் பதிலளித்துள்ள திருப்பூர் சுப்ரமணியம் “FDFS ரிவ்யூகளுக்கு தடை போடுவதால் யுடியுபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் அவர்களால் ஒட்டுமொத்த திரையுலகும் பாதிக்கப்படுகிறதே. தனிமனித தாக்குதல் செய்வோர் குறித்து நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்களுக்கு உரிமை உண்டு. திரையரங்குகளுக்கு வெளியே ரிவ்யூ எடுப்பதை எங்களால் தடுக்க முடியாது. அதை சட்ட ரீதியாக அணுகவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments