Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து ஆனாலும் தொடரும் ஜி வி பிரகாஷ் & சைந்தவியின் இசைப் பயணம்… அவரே வெளியிட்ட அறிவிப்பு!

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (14:29 IST)
2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதுசம்மந்தமாக சைந்தவி வெளியிட்ட அறிக்கையில் “தங்களுக்கு கிடைத்த செய்திகளை வைத்துக் கொண்டு பலரும் பலவிதமாக பேசுவது இதயத்தை நோகச் செய்கிறது. எங்கள் விவாகரத்து எந்தவொரு புற காரணத்தாலும் நடக்கவில்லை. எவர் ஒருவரையும் காரணமின்றி அவதூறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கள் முன்னேற்றத்துக்காக நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது.  நானும் ஜி வி பிரகாஷும் 24 ஆண்டுகளாக பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். எங்கள் நட்பு இனிமேலும் தொடரும்” எனக் கூறியிருந்தார்.

அதேபோல இப்போது இருவரும் இணைந்து ஒரு கச்சேரியில் பாடவுள்ளனர். அடுத்த மாதம் 7 ஆம் தேதி ஜி வி பிரகாஷ் மலேசியாவில் இசைக் கச்சேரி நடத்துகிறார். அதில் ஜி வி இசையில் கணிசமான பாடல்களைப் பாடியுள்ள சைந்தவியும் பாடுகிறார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments