Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் அடுத்த படத்திற்கு 3 இசையமைப்பாளர்கள்: யார் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:18 IST)
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ராதே ஷ்யாம்’
 
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராதே ஷ்யாம் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்கள். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்க உள்ளார். அதேபோல் ஹிந்தி படத்தில் மிதுன் மற்றும் மனன் பரத்வாஜ் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர் 
 
ஆக இந்த படத்திற்கு மொத்தம் மூன்று இசையமைப்பாளர்கள் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ள ஜஸ்டின் பிரபாகருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments