Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா: விரைவில் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:11 IST)
ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா: விரைவில் அறிவிப்பு!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறாத நிலையில் இந்த படம் தொடருமா என்பதே சந்தேகமாக உள்ளது
 
ஏற்கனவே தேர்தல் பணி இருப்பதால் கமல்ஹாசன் தேர்தல் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என தெரிகிறது. தேர்தலுக்கு பின்னரும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் தான் நடிப்பார் என்றும் இந்தியன் 2 படத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை கைவிட்டுவிட்டு ஷங்கர் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராம்சரண் தேஜா தான் ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோ என்றும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ராம் சரண் தேஜாவின் 15வது திரைப்படமான இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படம் 2022ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments