இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் பிரபாஸூக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பாகுபலி 1 மற்றும் 2 படங்களை அடுத்து பிரபாஸ் இந்தியா முழுக்க அறியப்பட்ட நடிகராக மாறியுள்ளார். அவர் நடிப்பில் இப்போது உருவாகும் 4 படங்களின் பட்ஜெட் மட்டும் 1000 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸூக்கு இப்போது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே நடிகை அனுஷ்காவும் அவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதை இருவரும் மறுத்தனர். இப்போது தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.