Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ படத்தில் பஞ்ச் டயலாக் கிடையாது.. புது விஜய்யை பாக்க போறீங்க! – சர்ப்ரைஸ் தரும் லோகேஷ் கனகராஜ்!

Advertiesment
லியோ படத்தில் பஞ்ச் டயலாக் கிடையாது.. புது விஜய்யை பாக்க போறீங்க! – சர்ப்ரைஸ் தரும் லோகேஷ் கனகராஜ்!
, ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (10:02 IST)
விரைவில் வெளியாக உள்ள லியோ படத்தில் பஞ்ச் வசனங்களே கிடையாது என்று அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஷூட்டிங் தொடங்கியது முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் ட்ரெய்லர் வரவேற்பையும், அதே சமயம் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது. காரணம் அதில் விஜய் பேசிய இருக்கும் கெட்ட வார்த்தைகள்.

இது குறித்து சமீபத்தில் பேசிய லோகேஷ் கனகராஜ் “படத்தில் விஜய் பேசியுள்ள வசனங்களுக்கு நான்தான் பொறுப்பு” என்று கூறியுள்ளார். மேலும் “இந்த படத்தில் பஞ்ச் வசனங்கள் கிடையாது. ஹீரோ அறிமுக பாடல், அறிமுக சண்டை காட்சிகளோ கிடையாது. இந்த படத்தில் விஜய்யின் வழக்கமான மேனரிசங்கள் கூட இருக்காது. இந்த படத்தில் முழுக்க புதுமையான விஜய்யை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டனுக்கே ஸ்ட்ரைக் கொடுத்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!