Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜையுடன் துவங்கியது பாபிசிம்ஹாவின் புதிய படம்!

பூஜையுடன் துவங்கியது பாபிசிம்ஹாவின்  புதிய படம்!
, வியாழன், 28 நவம்பர் 2019 (17:06 IST)
தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர் பாபிசிம்ஹா SRT  எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு  புதுப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.
 
இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார். ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை மேற்கொள்ள சுனில் SK  ஒளிப்பதிவு ஏற்றுள்ளார்.  
 
webdunia
இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படம் பெரும் பொருட்செலவில்  சிறப்பாக எடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-ஜோதிகா