Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பட்டமாக காப்பியடித்த அனிருத் - கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!

Advertiesment
அப்பட்டமாக காப்பியடித்த அனிருத் - கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!
, வியாழன், 28 நவம்பர் 2019 (14:36 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இத்தரக்கிடையில் நேற்று தர்பார் படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் ரிலீஸானது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகிய இப்பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி இணைந்து பாடியிருந்தனர். இப்பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் யூடியூபில் நம்பர் ஒன்  இடத்தை பிடித்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்பாடலை அனிருத் அப்பட்டமாக காப்பியடித்துள்ளார் என கூறி அண்ணாமலை படத்தில் இடம்பெறும் "வந்தேன்டா பாலிக்காரன்" இசையை காப்பியடித்துள்ளனர் என்றும்,  "வைகாசி பிறந்தாச்சு" படத்தில் இடம்பெறும் "தண்ணிக்குடம் எடுத்து தங்கம் நீ நடந்துவந்தா" என்ற பாடலை போன்றே இந்த பாடலுக்கு இசையமைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், ஐயப்பன் பக்தி பாடல்கள் ஆகியவற்றை போலவே இந்த பாடல் இருக்கிறது என ஆதாரத்துடன் வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலோடு மோதும் அஜித் – தள்ளிப்போன வலிமை ரிலிஸ் !