Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு, விவேக் கூட்டணியில் அதிகப்படம்…. அவர் ஆத்மா அமைதிகொள்ளட்டும்- பிக்பாஸ் பிரபலம்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (22:56 IST)
கார்த்தி – அனுஷ்கா நடிப்பில் வெளியான சகுனி, கருணாஷின் அம்பாசமுத்திரம் அம்பானி, கண்ணும் கண்ணும், கற்றது கள்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நெல்லை சிவா. இவர் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களின் பிரபலமானார். அவர் பேசும் நெல்லை பேச்சு வழக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

கண்ணும் கண்ணும் படத்தில் நடிகர் வடிவேலு கிணத்தக் காணாம் என்று போலீஸாக இருக்கும் நெல்லை சிவாவிடம் கூறும் காமெடி பிரபலமானது.

இந்நிலையில். திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவந்த நெல்லை சிவா இன்று தனது சொந்த ஊரில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவரது இறுதிச்சடங்கு நாளை நெல்லைமாவட்டத்தில் உள்ள பணகுடியில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய விருது இயக்குநரும், பிக்பாஸ் பிரபலமுமான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது மரணத்திற்கு இரங்கல் பதிவிட்டுள்ளார்.

அதில், என்னுடைய பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.. இவரின் நெல்லை தமிழ் அழகு.. கட்டபொம்மனின் முழு வசனத்தையும் நெல்லைத்தமிழில் பேசி என் சிந்தனைகளை வேறுபக்கம் யோசிக்க வைத்தவர். வடிவேலு, விவேக் இவர்களுடனான கூட்டணியில் அதிகம் நடித்திருக்கிறார். ஆத்மா அமைதிகொள்ளட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அட்லி இயக்கும் அடுத்த படம் வரலாற்றுக் கதையா?... வெளியான தகவல்!

இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது

"எமகாதகன்" ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது...

தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி: விஜய்க்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments